Published : 16 Oct 2017 02:57 PM
Last Updated : 16 Oct 2017 02:57 PM
இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுவது என்பது போர் போன்றது என்றும் அந்த அணிக்கு எதிராக வெறுப்பை வளர்த்துக் கொண்டால்தான் உத்வேகம் பிறக்கும் என்று ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
2013-ம் ஆண்டு பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் போது ‘ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களைப் பார்த்து இங்கிலாந்து வீரர்களின் கண்களில் பயம் தெரிகிறது’என்றார் டேவிட் வார்னர்.
இந்த முறை ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “வரலாறு, பெருமை ஆகியவைதான் இந்தத் தொடரில் முக்கியம், எனவே இதனைக் காப்பாற்ற களமிறங்கும் போது அது போர் தான்.
போரில் மிகவிரைவில் களமிறங்க முயற்சி செய்வோம். எதிரணி வீரர்களின் கண்களை கூர்ந்து நோக்கி, அவரை நான் எப்படி வெறுக்க வேண்டும், அவரை எப்படி வீழ்த்த வேண்டும் என்பதைப் பழக வேண்டும்.
நமக்குள் இந்தத் தீப்பொறியைக் கண்டுபிடித்துக் கொண்டால்தான் எதிரணியினரிடத்தில் அதனைக் கொண்டு செல்ல வேண்டும். நாம் நம்மில் ஆழ்ந்து சென்று நம்மை நாமே தோண்டிச் சென்று அவர்கள் மீதான ஒரு வெறுப்பை வந்தடைய வேண்டும்.
ஸ்டார்க், கமின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், நேதன் கூல்ட்டர் நைல், ஜேக்சன் பேர்ட் ஆகியோர் ஒரு அணியாக தாக்குதலுக்குத் தயாராக உள்ளனர். எனக்கே வலைப்பயிற்சிக்குச் செல்ல பயமாக இருக்கிறது. எனவே அவர்களும் அஞ்சுவார்கள்” என்றார் வார்னர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT