Published : 10 May 2023 10:37 AM
Last Updated : 10 May 2023 10:37 AM
மும்பை: தனது ஆட்டம் குறித்து தனக்குத் தெரியும் என்று ஆட்ட நாயகன் விருதுக்குப்பின் பேட்டி அளித்த சூர்யகுமார் தெரிவித்தார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 54-வது லீக் போட்டியில் பெங்களூரு அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ். அவரது அதிரடி ஆட்டத்தால் 16.3 ஓவர்களில் 200 ரன்கள் என்ற இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு மும்பை முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில் 35 பந்துகளில் 83 ரன்கள் எடுத்திருந்தார் சூர்யகுமார் யாதவ். மற்றொரு பேட்ஸ்மேனான நேஹல் வதேரா 34 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அசத்தினார். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட அவர் தெரிவித்தது.
“எங்கள் அணியின் பார்வையில் இந்த வெற்றி மிகவும் தேவையான ஒன்று. அணியின் சொந்த மைதானத்தில் இதுபோன்ற போட்டியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. எதிரணியினர் ஒரு திட்டத்துடன் நிச்சயம் வந்திருப்பார்கள். மைதானத்தின் பெரிய பகுதியில் என்னை ஷாட் அடிக்க செய்வது அவர்களது திட்டம். பேஸ் இல்லாமல் பந்தை நிதானமாக வீசுவது. நான் நேஹல் இடம் இதை மட்டுமே சொல்லி இருந்தேன். பந்தை பலமாக அடிப்பது, ஃபீல்டர்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் பந்தை அடிப்பது, ரன் ஓடுவது. போட்டியில் நாம் செய்ய நினைப்பதை பயிற்சி செய்ய வேண்டும். எனது ரன்கள் எங்குள்ளன என்பதை நான் அறிவேன். என் ஆட்டம் எனக்குத் தெரியும். அதை தவிர வித்தியாசமாக நான் எதுவும் செய்யவில்லை” என சூர்யகுமார் தெரிவித்தார்.
Up Above The World So High
Like A Diamond His Name Is SKY #TATAIPL | #MIvRCB | @surya_14kumar | @mipaltan pic.twitter.com/EgUDqe7aao— IndianPremierLeague (@IPL) May 9, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT