Published : 06 May 2023 09:23 PM
Last Updated : 06 May 2023 09:23 PM
டெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 181 ரன்களைச் சேர்த்துள்ளது.
16வது ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன. இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியும் பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஃபாப் டு பிளெசிஸ், விராட் கோலி இணை 10 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி ரன்களைச் சேர்த்தனர். 11வது ஓவரில் ஃபாப் டு பிளெசிஸ் 45 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த மேக்ஸ்வெல் அதே ஓவரில் டக்அவுட்டானார். 15 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த விராட் கோலியை 55 ரன்களுடன் முகேஷ் குமார் வெளியேற்ற 16 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 137 ரன்களைச் சேர்த்திருந்தது.
விராட் கோலி விட்டுச் சென்ற இடத்தை நிரப்பும் வகையிலான மஹிபால் லோமரோரின் 3 சிக்ஸ்களுடனான அதிரடி ஆட்டம் ஆர்சிபி ரசிகர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. கூடவே தினேஷ் கார்த்திக் தன் பங்குக்கு ஒரு சிக்ஸை விளாசி இருப்பை பதிவு செய்துவிட்டு 11 ரன்களுடன் கிளம்பினார். அவருக்கு அடுத்து வந்த அனுஜ் ராவத் சிக்சர் அடிக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 181 ரன்களைச் சேர்த்தது. மஹிபால் லோமரோர் 54 ரன்களிலும், அனுஜ் ராவத் 8 ரன்களிலும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். டெல்லி அணி தரப்பில் மிட்செல் மாஷ் 2 விக்கெட்டுகளையும், முகேஷ்குமார், கலீல் அஹமத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT