Published : 04 May 2023 02:38 PM
Last Updated : 04 May 2023 02:38 PM
மும்பை: ‘நடப்பு ஐபிஎல் சீசன் முடிந்ததும் கோலி மற்றும் கம்பீர் என இருவரையும் சந்திக்க செய்வேன். அப்போது அவர்கள் இருவரையும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவ செய்வேன்’ என உறுதி கொடுத்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் போட்டியில் லக்னோ அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தி இருந்தது. இந்தப் போட்டிக்கு பின்னர் பெங்களூரு வீரர் கோலி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகர் கம்பீர் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. அது அப்படியே நேரலையில் ஒளிபரப்பானது. இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் அதீத கவனம் பெற்றது.
“அனைவரும் இந்த சம்பவம் குறித்து தான் பேசி வருகிறோம். யார், யாரிடம் என்ன சொன்னார்கள் என்பது குறித்தே இந்த பேச்சு நீள்கிறது. அவர்கள் இருவரும் இணைந்து விளையாடியவர்கள். யாருமே எதிர்பாராத இதை நாம் கடந்து செல்ல வேண்டும். இந்த சீசன் முடிந்ததும் அவர்கள் இருவரையும் சந்திக்க செய்வேன். அதன்போது அவர்கள் இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தழுவ செய்வேன். நிச்சயம் அதற்கான முயற்சியை நான் முன்னெடுப்பேன். அனைத்திற்கும் தீர்வு காண செய்வேன்” என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதனை தனது யூடியூப் சேனலில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2008 ஐபிஎல் சீசனில் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்தமைக்கு தான் வெட்கி தலை குனிவதாக தனது வேதனையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment