Published : 29 Apr 2023 09:26 PM
Last Updated : 29 Apr 2023 09:26 PM

IPL 2023: SRH vs DC | அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென் க்ளாஸ் ஆட்டம் - ஹைதராபாத் 197 ரன்கள் குவிப்பு

டெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை குவித்துள்ளது.

16ஆவது ஐபிஎல் சீசனின் இன்றைய 40-வது லீக் ஆடத்தில் ஹைதராபாத் அணியும் டெல்லி அணியும் மோதின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது. மயங்க் அகர்வால் 5 ரன்களிலும், ராகுல் திரிபாதி 10 ரன்களிலும், ஏய்டன் மார்கம் 8, ஹாரி ப்ரூக் 0 ரன்களிலும் அவுட்டானது அந்த அணிக்கு அவ்வளவு நல்ல தொடக்கமில்லை. இருந்தாலும் மறுபுறம் தனியொரு ஆளாக நின்று அபிஷேக் ஷர்மா வந்ததும் கிளம்பும் தன் அணி பேட்ஸ்மேன்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே 36 பந்துகளில் 67 ரன்களை குவித்தார்.

அவரும் அவுட்டாக 12 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 109 ரன்களை சேர்த்தது. அபிஷேக் ஷர்மாவுக்குப்பிறகு, ஹென்ரிச் கிளாசென் 27 பந்துகளில் 53 ரன்களை விளாச நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்த ஹைதராபாத் 197 ரன்களை குவித்தது. அகேல் ஹொசைன் 16 ரன்களுடனும், ஹென்ரிச் கிளாசென் 53 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

டெல்லி அணி தரப்பில் மிட்செல் மார்ஷ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், அக்சர் படேல், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x