Published : 29 Apr 2023 06:27 PM
Last Updated : 29 Apr 2023 06:27 PM

சசெக்ஸ் அணிக்காக சதம் விளாசிய ‘கேப்டன்’ புஜாரா - டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு முன்பு இங்கிலாந்தில் அபாரம்!

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியான சசெக்ஸ் அணிக்கு ஆடிவரும் புஜாரா சற்று முன் கிளவ்ஸ்டர்ஷயர் அணிக்கு எதிராக பிரிஸ்டல் மைதானத்தில் சதம் அடித்தார். புஜாரா 193 பந்துகளில் 14 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 104 ரன்கள் எடுத்து ஆடிவருகின்றார். சசெக்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 309 ரன்களை எடுத்துள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தின் 2ம் நாள் கேப்டன் புஜாரா அட்டகாசமான தடுப்பாட்ட உத்தியுடன் அவரது வழக்கமான ஷாட்களுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நேற்று 99 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்த புஜாரா, இன்று டி லாங்கே பந்தை பவுண்டரிக்கு அனுப்பி சதம் எடுத்தார். இது புஜாராவின் 58வது முதல் தர கிரிக்கெட் சதமாகும்.

புஜாரா ஸ்ட்ரைக்கை எடுத்ததிலிருந்தே அவர் பாணி லாங் இன்னிங்சை ஆட அவர் உறுதியுடன் இருந்ததாகவே தெரிகிறது. டீ லாங்கே அருமையான பவுலர் என்பதால் அவரை ஆடும்போது எச்சரிக்கை காட்டி ஆடினார். முதல் 19 ரன்களை புஜாரா 78 பந்துகளில் எடுத்தது ‘டிபிகல்’ புஜாரா இன்னிங்சுக்கான அடித்தளமாக அமைந்தது. பிறகு இதே டி லாங்கேயை ஒரு புல் ஷாட் பவுண்டரி, பிறகு கோஹார் என்ற பவுலரை ஒரு ஸ்கொயர் கட் பவுண்ட்ரி விளாசி ரன்களை கொஞ்சம் வேகமாக எடுக்கும் ஆட்டத்திற்குத் திரும்பினார் புஜாரா.

78 பந்துகளில் 19 எடுத்த புஜாரா பிறகு 108 பந்துகளில் 40 என்று இருந்தார். அரைசதத்தை 3 மணி நேரத்தில் 8 பவுண்டரிகளுடன் எடுத்தார் புஜாரா. ஒரு முறை இடது கை ஸ்பின்னர் கோஹாரின் பந்தை புஜாரா ஆடும்போது பந்து ஸ்டம்பை உரசிக்கொண்டு சென்றது என்பது மட்டுமே புஜாராவின் ஒரே தவறு. புஜாரா 99 நாட் அவுட் என்று நேற்று முடித்தார்.

இன்று டீ லாங்கே பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதம் எடுத்தார் புஜாரா. தற்போது 205 பந்துகளில் 15 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் புஜாரா 111 ரன்கள் எடுத்து களத்தில் ஆடிவருகின்றார். சசெக்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி 10 போட்டிகளில் புஜாராவின் ஸ்கோர் இதோ:

  • இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் 90 மற்றும் 102 நாட் அவுட்.
  • இந்தியா வங்கதேசம் டெஸ்ட் மிர்ப்பூர்- 24 மற்றும் 6.
  • சவுராஷ்ட்ரா - ஹைதராபாத் -25,
  • சவுராஷ்ட்ரா - ஆந்திரா - 5 மற்றும் 91.
  • இந்தியா-ஆஸ்திரேலியா நாக்பூர் -7
  • இந்தியா-ஆஸ்திரேலியா - டெல்லி, 0 மற்றும் 31.
  • இந்தியா-ஆஸ்திரேலியா - இந்தூர் 1 மற்றும் 59.
  • இந்தியா - ஆஸ்திரேலியா, அகமதாபாத் - 42.
  • சசெக்ஸ் - துர்ஹாம் - 115 மற்றும் 35.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x