Published : 26 Apr 2023 07:51 AM
Last Updated : 26 Apr 2023 07:51 AM
காலே: இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 492 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் அதிகபட்ச ரன்களாக இது அமைந்தது.
காலே நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் 2-வது நாளான நேற்று அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 145.3 ஓவர்களில் 492 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. டெஸ்ட் போட்டிகளில் அந்த அணியின் அதிகபட்ச ரன் குவிப்பாக இது அமைந்தது. இதற்கு முன்னர் அயர்லாந்து 1998-ம் ஆண்டு டப்ளின் நகரில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்டில் 339 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.
காலே டெஸ்ட் போட்டியில் லார்கன் டக்கர் 106 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 80 ரன்களும், கர்திஸ் கேம்பர் 229 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 111 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 18.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் எடுத்தது. நிஷான் மதுஷங்கா 41, கேப்டன் திமுத் கருணரத்னே 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT