Published : 22 Apr 2023 11:53 PM
Last Updated : 22 Apr 2023 11:53 PM
மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் மட்டுமே தேவைப்பட 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் பஞ்சாப் பவவுலர் அர்ஷ்தீப் சிங்.
215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி விரட்டியது. இஷான் கிஷன், 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். பின்னர் களம் கண்ட கேமரூன் கிரீன் உடன் இணைந்து 76 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கேப்டன் ரோகித் சர்மா. 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார் ரோகித்.
தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் இலக்கை விரட்டுவதில் வேகம் கூட்டினார். அவருக்கு கிரீன் துணை நின்றார். இருவரும் 75 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கிரீன், 43 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், 26 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
பின்னர் திலக் வர்மா, நேஹல் வதேரா ஆகியோர் அர்ஷ்தீப் சிங் வேகத்தில் கடைசி ஓவரில் க்ளீன் போல்ட் ஆகினர். இரண்டு முறையும் ஸ்டம்புகளை உடைத்திருந்தார் அர்ஷ்தீப். கடைசி ஓவரை அவர் வீசி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து, 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். மும்பை அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
நடப்பு சீசனில் மொத்தமாக 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் கைப்பற்றி பவுலர் என்ற அடிப்படையில் பர்ப்பிள் கேப் பெற்றுள்ளார் அர்ஷ்தீப். ஆட்ட நாயகன் விருதை பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரன் வென்றார்.
Nerves of steel!@arshdeepsinghh defends 16 in the final over and @PunjabKingsIPL register a 13-run win in Mumbai
Scorecard https://t.co/FfkwVPpj3s #TATAIPL | #MIvPBKS pic.twitter.com/twKw2HGnBK— IndianPremierLeague (@IPL) April 22, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT