Published : 20 Apr 2023 10:33 PM
Last Updated : 20 Apr 2023 10:33 PM
டெல்லி: டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 127 ரன்கள் சேர்த்துள்ளது.
ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய பணிக்க, அதன்படி முதலில் களமிறங்கியது.
ஜேசன் ராய் மற்றும் லிட்டன் தாஸ் ஓப்பனிங் செய்தனர். 2 ஓவர்கள் கூட இந்த இணை தாக்குப்பிடிக்க முடியவில்லை. 4 ரன்கள் எடுத்திருந்த லிட்டன் தாஸ் விக்கெட்டை எடுத்து கேகேஆரின் சரிவை தொடங்கிவைத்தார் முகேஷ் குமார். வெங்கேடஷ் ஐயர் விக்கெட்டை நார்ட்ஜே வீழ்த்தினார். நிதீஷ் ராணாவை இஷாந்த் சர்மா கவனித்துக்கொள்ள, மந்தீப் சிங் விக்கெட்டை எடுத்தார் அக்சர் படேல்.
இதனால் 50 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது கேகேஆர். தொடர்ந்து ரிங்கு சிங், சுனில் நரைன் மற்றும் அங்குள் ராய் போன்றோரை சொற்ப ரன்களில் ஆட்டமிக்க செய்து டெல்லி பவுலர்கள் கெத்துகாட்டினர். கொல்கத்தா தரப்பில் ஓப்பனிங் இறங்கிய ஜேசன் ராய் 43 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுக்க, 16 ஓவர்களில் எல்லாம் கேகேஆர் 9 விக்கெட்டை இழந்திருந்தது.
எனினும் கடைசி கட்டத்தில் ஆண்ட்ரே ரஸ்ஸல் அந்த அணிக்காக போராடினார். ஆனால் அவரையும் பெரிய ஷாட்கள் ஆடவிடாமல் டெல்லி பவுலர்கள் சோதித்தனர். இறுதி ஓவரில் மட்டும் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அதிரடி காண்பித்தார். இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது கொல்கத்தா. இறுதிவரை ஆட்டமிழக்கமல் இருந்த ரஸ்ஸல் 38 ரன்கள் எடுத்தார்.
டெல்லி தரப்பில் இஷாந்த் சர்மா, நார்ஜே, அக்சர் படேல், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT