Published : 19 Apr 2023 07:26 AM
Last Updated : 19 Apr 2023 07:26 AM
காலே: அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை அணி.
காலே நகரில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 591 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து முதல் இன்னிங்ஸில் 52.3 ஓவர்களில் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் பெற்றது. 448 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 54.1 ஓவரில் 168 ரன்களுக்கு சுருண்டது.
ஹாரி டெக்டர் 42, ஜார்ஜ் டாக்ரல் 32, கர்திஸ் கேம்பர் 30 ரன்கள் எடுத்தனர். இலங்கை சார்பில் ரமேஷ் மெண்டிஸ் 4, பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகனாக பிரபாத் ஜெயசூர்யா தேர்வானார். முதல் இன்னிங்ஸில் அவர், 7 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். 2-வது டெஸ்ட் போட்டி 24-ம் தேதி தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT