Published : 18 Apr 2023 11:35 PM
Last Updated : 18 Apr 2023 11:35 PM

IPL 2023: MI vs SRH | முதல் விக்கெட் வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர் - மும்பை இந்தியன்ஸ் 14 ரன்களில் வெற்றி

ஹைதாராபாத்: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

194 ரன்கள் இலக்கை துரத்திய சன் ரைசர்ஸ் அணிக்கு கடந்த போட்டியில் செஞ்சுரி விளாசிய ஹாரி ப்ரூக் இம்முறை 2வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை வீழ்த்திய ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் 4வது ஓவரில் 7 ரன்கள் எடுத்திருந்த திரிபாதி விக்கெட்டையும் எடுத்தார். எனினும் மயங்க் அகர்வால் இம்முறை நிதானமாக விளையாடினார்.

அவருக்கு பக்கபலமாக சிறிதுநேரம் தாக்குப்பிடித்தார் கேப்டன் எய்டன் மார்க்ரம். 22 ரன்கள் எடுத்திருந்த மார்க்ரமை மும்பை வீரர் கிரீன் வெளியேற்ற, அபிஷேக் சர்மா வந்தே வேகத்தில் நடையைக்கட்டினார். ஆனால், ஹென்ரிச் கிளாசென் வந்ததும் அதிரடியாக விளையாடினார்.

16 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்திருந்த அவரை சாவ்லா வீழ்த்த, ஓப்பனிங் இறங்கி நிலைத்திருந்த மயங்க் அகர்வாலை 48 ரன்களில் இம்பேக்ட் பிளேயராக வந்த ரிலே மெரிடித் அவுட் ஆக்கினார். இதன்பின் வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் பெரிதாக யாரும் சோபிக்கவில்லை. கடைசி 6 பந்துகளுக்கு 20 ரன்கள் தேவைப்பட, அர்ஜுன் டெண்டுல்கர் பந்துவீசினார். ஓவரின் ஐந்தாவது பந்தில் புவனேஷ்வர் குமாரை அவுட் ஆக்கினார். ஐபிஎல் தொடரில் அர்ஜுன் எடுக்கும் முதல் விக்கெட் இதுவாகும். கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்த, மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

சன்ரைசர்ஸ் அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் சாவ்லா, பெஹ்ரன்டோர்ஃப், மெரிடித் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

அதேநேரம் மும்பை வீரர் டிம் டேவிட் இந்த ஆட்டத்தில் 4 கேட்ச் மற்றும் ஒரு ரன் அவுட் செய்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

மும்பை இந்தியன்ஸ் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன், ரோஹித் ஷர்மா களமிறங்கினர். அதில் வழக்கம் போல ரோஹித் ஷர்மா முதலில் அவுட்டானார். நடராஜன் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து 28 ரன்களில் வெளியேறினார்.

இஷான் கிஷன் 2 சிக்சர்களை விளாசி நம்பிக்கை கொடுத்தாலும், அந்த நம்பிக்கை 38 ரன்களை வரையே நீடித்தது. அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் சிக்ஸ் அடித்தார். என்ன அவசரமோ அவுட்டாகி கிளம்பிவிட்டார். 15 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த மும்பை 130 ரன்களை சேர்த்தது.

திலக் வர்மா 4 சிக்சர்களை அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 17 பந்துகளில் 37 ரன்களைச் சேர்ந்தவரை புவனேஷ்குமார் விக்கெட்டாக்கினார். மறுபுறம் கேமரூன் கிரீன் 40 பந்துகளில் 64 ரன்களை குவித்து இறுதிவரை அவுட்டாகாமல் நிலைத்து நின்றார். இறுதியில் டிம் டேவிட் 16 ரன்களுடன் ரன்அவுட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களைச் சேர்த்தது.

ஹைதராபாத் தரப்பில் மார்கோ ஜேன்சன் 2 விக்கெட்டுகளையும், நடராஜன், புவனேஷ்குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x