Published : 13 Apr 2023 12:49 PM
Last Updated : 13 Apr 2023 12:49 PM
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் காயம் எனும் கருமேகத்தின் வலையில் சிக்கி தவித்து வருகின்றனர். ஜேமிசன், முகேஷ் சவுத்ரி, மகாலா, தீபக் சாஹர், சிமர்ஜித், ஸ்டோக்ஸ் என வரிசையாக காயப் பட்டியலில் ஒருவர் பின் ஒருவராக இணைந்து வருகின்றனர். இதில் சிலர் சீசன் முழுவதும், சிலர் சில ஆட்டங்களையும் மிஸ் செய்துள்ளனர்.
இந்த சூழலில் சிஎஸ்கே அணித்தலைவர் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிகிறது. இது குறித்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் பகிர்ந்துள்ளார். குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியை தோனி மிஸ் செய்வார் என சொல்லப்பட்டது. இருந்தும் அந்தப் போட்டியில் தோனி விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தோனி முழங்கால் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் ஆட்டத்தில் அவரால் சில நகர்வுகளை மேற்கொள்ள முடியவில்லை. அதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவரது ஃபிட்னெஸ் ப்ரொபஷனலாக ரகமாக இருக்கும். நடப்பு சீசனுக்காக ராஞ்சியில் வலைப்பயிற்சியை துவங்கினார். அதன் பின்னர் சென்னையில் சீசனுக்கு முந்தைய பயிற்சியை ஆரம்பித்தார்.
அவர் தனது காயத்தை மேனேஜ் செய்தபடி அணியை தொடர்ந்து வழிநடத்துவார் என நாங்கள் நம்புகிறோம். போட்டியில் விளையாடுவதற்கான உடற்தகுதியை அவர் கொண்டுள்ளார்” என ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் அணியுடனான தோல்விக்கு பிறகு அவர் இதனை பகிர்ந்துள்ளார். காயம் காரணமாக தான் தோனியால் சில நகர்வுகளை மேற்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment