Last Updated : 27 Sep, 2017 10:21 AM

 

Published : 27 Sep 2017 10:21 AM
Last Updated : 27 Sep 2017 10:21 AM

வாவ்ரிங்காவுக்கு பின்னடைவு

டென்னிஸ் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா ஒரு இடம் பின்தங்கி 9-வது இடத்தை பிடித்துள்ளார். கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் அவர், சமீப காலமாக எந்தவித போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.

முதல் 10 இடங்களுக்குள் மற்றபடி எந்தவித மாற்றமும் இல்லை. ஸ்பெயினின் ரபேல் நடால், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ், குரோஷியாவின் மரின் சிலிச், செர்பியாவின் ஜோகோவிச், ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் முறையே 1 முதல் 8-வது இடங்களில் உள்ளனர். ஸ்பெயினின் பேப்லோ கார்ரெனோ பஸ்டா 10-வது இடம் வகிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x