Published : 07 Apr 2023 08:06 AM
Last Updated : 07 Apr 2023 08:06 AM
மிர்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து வீரர் லோர்கன் டக்கர் சதம் விளாசினார்.
மிர்பூரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து 214 ரன்களும், வங்கதேசம் 369 ரன்களும் எடுத்தன. 155 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய அயர்லாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 107 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான லோர்கன் டக்கர் 162 பந்துகளில், 14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 108 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த 2-வது அயர்லாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார் லோர்கன் டக்கர். இதற்கு முன்னர் கெவின் ஓ’பிரையன் 2018-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார். 26 வயதான லோர்கன் டக்கர், ஹென்றிடக்கருடன் இணைந்து 72 ரன்களும், மெக்பிரினுடன் இணைந்து 111 ரன்களும் சேர்த்தார். இந்த இரு பார்ட்னர்ஷிப்புகளும் அயர்லாந்து அணிக்கு முக்கியமானதாக அமைந்தது. இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது அயர்லாந்து அணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT