Published : 05 Apr 2023 02:45 PM
Last Updated : 05 Apr 2023 02:45 PM

NZ vs SL | ஐசிசி ஆடவர் டி20 போட்டியின் ‘முதல் பெண் கள நடுவர்’ கிம் காட்டன்!

கிம் காட்டன்

துனெடின்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முழு உறுப்பினராக உள்ள ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான சர்வதேச டி20 போட்டியில் முதல் பெண் கள நடுவராக செயல்பட்டுள்ளார் கிம் காட்டன். இன்று நடைபெற்ற இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில்தான் கள நடுவராக அவர் செயல்பட்டுள்ளார்.

48 வயதான அவர் கடந்த 2018 முதல் 54 மகளிர் டி20 மற்றும் 24 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணியாற்றி உள்ளார். நியூஸிலாந்து நாட்டை சேர்ந்தவர். கடந்த 2020-ல் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஹாமில்டன் போட்டியில் டிவி அம்பயராக செயல்பட்டிருந்தார் அவர். அதுதான் ஆடவர் கிரிக்கெட்டில் அவர் நடுவராக செயல்பட்ட முதல் போட்டி என தெரிகிறது.

2018 முதல் மூன்று டி20 உலகக் கோப்பை மற்றும் ஒரு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நடுவராக செயல்பட்டுள்ளார். இதில் 2020, 2022 மற்றும் 2023 இறுதிப் போட்டிகளும் அடங்கும்.

இந்தப் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட் செய்தது இலங்கை. 19 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை 14.4 ஓவர்களில் கடந்தது நியூஸிலாந்து. அதன் மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x