Published : 03 Apr 2023 12:23 PM
Last Updated : 03 Apr 2023 12:23 PM

IPL | சேப்பாக்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் சிஎஸ்கே: சாதனைகள் என்ன?

தோனி, ஜடேஜா | கோப்புப்படம்

சென்னை: சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த முறை பல்வேறு கணக்குகளுடன் தோனி தலைமையிலான சென்னை அணி களம் கண்டுள்ளது. இந்த சீசனின் முதல் லீக் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் சொந்த மண்ணில் நடைபெறும் முதல் போட்டியில் வெற்றி காணுமா சிஎஸ்கே என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த சீசனில் மோசமான ஆட்டம் அமைந்திருந்தாலும் இந்த சீசனில் அதற்கான தக்க பதிலடியை எதிரணிகளுக்கு சிஎஸ்கே கொடுக்கும் என தெரிகிறது. அதுவும் சேப்பாக்கம் மைதானம் என்றால் சொல்லவே வேண்டாம்.

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே-வின் வெற்றி எப்படி?

  • கடந்த 2008 முதல் சேப்பாக்கம் மைதானத்தில் 56 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி உள்ளது. அதில் 40 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
  • அதுவும் கடந்த 2013 முதல் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே-வின் ஆதிக்கம் அதிகம் என்றே சொல்லலாம்.
  • சேப்பாக்கத்தில் சென்னை அணி கடைசியாக விளையாடிய 21 போட்டிகளில் 19 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
  • நடப்பு சீசனில் இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்கும் 6-வது லீக் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக சென்னை களம் காண்கிறது. ரசிகர்கள், வீரர்கள் என அனைவரும் ஆர்வமாக இந்தப் போட்டிக்காக தயாராகிக் கொண்டு வருகின்றனர். நடப்பு சீசனில் இதுவரையில் நடந்து முடிந்துள்ள 5 லீக் போட்டிகளில் 4 ஆட்டங்களை சொந்த மைதானங்களில் விளையாடிய அணிகள் தான் வென்றுள்ளன. அந்த வகையில் சிஎஸ்கே-வும் சேப்பாக்கத்தில் வாகை சூடும் என நம்புவோம்.
  • தோனி, சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 54 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். 1,363 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 43.97. ஸ்ட்ரைக் ரேட் 143.17. மொத்தம் 7 அரைசதங்கள் பதிவு செய்துள்ளார். 33 கேட்ச் மற்றும் 15 ஸ்டெம்பிங் செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x