Published : 02 Apr 2023 07:45 PM
Last Updated : 02 Apr 2023 07:45 PM

IPL 2023: RR vs SRH | சோபிக்காத பேட்ஸ்மேன்கள்- ஹைதராபாத்தை வெற்றி கொண்டது ராஜஸ்தான் 

ஹைதராபாத்: சன்ரைசஸ் ஹைதாராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் சீசனின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் இணை தொடக்கம் கொடுத்தது. அதிரடி காட்டிய இந்த இணையை 6வது ஓவரில் ஃபசல்ஹக் பாரூக்கிபிரித்து பட்லரை 54 ரன்களில் வெளியேற்றினார். அவரைத் தொடர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 54 ரன்களில் அவுட்டானார்.

தேவ்தட் படிக்கல் 2 ரன்களிலும், ரியான் பராக் 7 ரன்களில் விக்கெட்டாக மற்றொருபுறம் சஞ்சு சாம்சன் நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தார். ஆனால் அவரும் 19வது ஓவரில் நடராஜனால் 55 ரன்களில் விக்கெட்டானார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை குவித்துள்ளது. ஹெட்மேயர் 22 ரன்களுடனும், அஸ்வின் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

ஹைதராபாத் அணி தரப்பில் ஃபசல்ஹக் பாரூக்கி, நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு தொடக்கமே மோசமாக அமைந்தது. ட்ரன்ட் போல்டு வீசிய முதல் ஓவரில் அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர். முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுக்கு ரன் எதுவுமில்லாமல் ரசிகர்கள் மனதில் அச்சத்தை விதைத்தது ஹைதாராபாத். அடுத்து ஹாரி ப்ரூக், மயங்க் அகர்வால் இணை பாட்னர்ஷிப் அமைத்தது. ஆனால் அதன் இறுக்கம் தளர்ந்ததால் 7வது ஓவரில் ப்ரூக் 13 ரன்களில் அவுட்டானார்.

அடுத்தடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னிலும், க்ளன் ப்ளிப்ஸ் 8 ரன்னிலும் வெளியேற மயங்க் அகர்வாலும் 27 ரன்களில் நடையைக்கட்டினார். ஆதில் ரஷித் தன் கடமைக்கும 18 ரன்களைச் சேர்க்க 17 ஓவர் முடிவில் ஹைதராபாத் 7 விக்கெட்டை இழந்து 92 ரன்களை மட்டுமே சேர்த்தது. புவேனஸ்குமார் 6 ரன்னில் சுருண்டார். இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே சேர்த்தது. அப்துல் சமத் 32 ரன்களுடனும், உம்ரான் மாலிக் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் 72 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதாராபாத்தை வெற்றிகொண்டது. ராஜஸ்தான் தரப்பில் சாஹல் 4 விக்கெட்டுகளையும், ட்ரண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜேசன் ஹோல்டர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x