Last Updated : 07 Sep, 2017 08:24 PM

 

Published : 07 Sep 2017 08:24 PM
Last Updated : 07 Sep 2017 08:24 PM

இரானுக்கு எதிராக 2-வது கோலை சிரியா அடித்த போது உணர்ச்சிவசப்பட்டு அழுத சிரியா வர்ணனையாளர்

உலகக்கோப்பை 2018-க்கான தகுதிச்சுற்றுக் கால்பந்து போட்டியில் 93-வது நிமிடத்தில் ஈரானுக்கு எதிராக அந்த 2-வது கோலை சிரியா அடித்து சமன் செய்த தருணத்தில் சிரியா நாட்டைச் சேர்ந்த வர்ணனையாளர் உணர்ச்சிவசப்பட்டு அழுத காட்சி வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சுமார் 10 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது இவரது உணரர்ச்சிகரம்.

சிரியா வீரர் அல் சோமா 93-வது நிமிடத்தில் அடித்த கோலால் இரானுக்கு எதிராக 2-2 என்று டிரா சாத்தியமானதோடு, ஆசிய பிளே ஆஃப் சுற்றுக்கும் சிரியா தகுதி பெற்றது. போரினால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான அரசியல், சமூக, வாழ்வியல் சூழலில் இருந்து வரும் சிரியா அணி உலகக்கோப்பை கால்பந்தில் தகுதி பெற கடுமையாகப் போராடி வருகிறது.

இந்த 2-வது கோலை அடித்தவுடன் சிரியா வர்ணனையாளர் 2 நிமிடங்களுக்கு தன்னை மறந்து “எங்கள் தேசிய அணிக்கு 2வது கோல், 2-வதுகோல் எங்கள் தேசிய அணிக்கு! யார் ஸ்கோர் செய்தது? சோமாதான், அது சோமாவாகத்தான் இருக்க முடியும்” என்று கத்தினார்.

மேலும், “அல்லா சோமா, சமன் செய்த கொல்!!, என்னை மன்னியுங்கள், நான் தொலைந்து போனேன். அவர்களை யாரும் நிறுத்த முடியாது, என்று கத்திக் கொண்டேயிருந்தவர் ஒரு கட்டத்தில் வாய்விட்டு அழத்தொடங்கினார். யூடியூப் பதிவிலும் இதற்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை சிரியா உலகக்கோப்பையை எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x