Published : 31 Mar 2023 07:01 PM
Last Updated : 31 Mar 2023 07:01 PM
சென்னை: நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசன் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த சீசனை டிஜிட்டல் வழியில் ஒளிபரப்பும் ஜியோ சினிமா தளத்தில் தமிழ் வர்ணனையாளர்கள் யார், யார் என்பதை பார்ப்போம்.
ஜியோ சினிமா தளத்தில் 4K ரெசல்யூஷனில் நேரலையில் போட்டிகள் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. கடந்த 2022 ஜூன் மாதம் நடைபெற்ற ஏலத்தில் 2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்புக்கான டிஜிட்டல் உரிமத்தை ரூ.20,500 கோடிக்கு ரிலையன்ஸின் வையாகாம் 18 நிறுவனம் ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை இப்போது ஜியோ டிவி அல்லது ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்க முடியும்.
தமிழ் உட்பட 12 மொழிகளில் ரசிகர்கள் இந்த முறை ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமாவில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நொடிக்கு 50 பிரேம் என்ற துல்லியத்தில், புள்ளி விவரங்களுடன் கூடிய ஹைப் மோட், மல்டி கேமரா ஆங்கிள் வியூ (360 டிகிரி கேமரா), வர்ணனையாளர்கள் உடன் சாட் செய்யும் வசதி போன்ற அம்சங்களுக்கும் இந்த முறை இருக்கும் என தகவல்.
தமிழ் வர்ணனையாளர்கள்: அபினவ் முகுந்த், ஆர். ஸ்ரீதர், வித்யூத் சிவராமகிருஷ்ணன், பாபா அபரஜித், பாபா இந்திரஜித், அனிருத் ஸ்ரீகாந்த், கே.பி அருண் கார்த்திக், சுதீர் ஸ்ரீநிவாசன், பகவதி பிரசாத், சஞ்சய் பால், ஸ்ரீநிவாசன் ராதாகிருஷ்ணன், சமீனா அன்வர், காயத்ரி சுரேஷ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT