Published : 31 Mar 2023 05:20 PM
Last Updated : 31 Mar 2023 05:20 PM
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. வரும் ஞாயிறு, அதாவது ஏப்ரல் 2-ம் தேதியன்று மும்பை இந்தியன்ஸ் அணி, ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. இந்த முறை மும்பை இந்தியன்ஸில் அதிரடி இங்கிலாந்து பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முழு தொடரிலும் ஆடிவிடுவார் என்றுதான் கூறப்படுகிறது.
ரோகித் சர்மாவின் பேட்டிங் நாளுக்கு நாள் சந்தேகமடைந்து வருகின்றது. குறிப்பாக குறுகிய வடிவங்களில் விரைவில் ஆட்டமிழந்து விடுகின்றார். கடந்த ஐபிஎல் தொடரில் அவரது பேட்டிங் செம சொதப்பலாக அமைய, மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியில் பின்வரிசையில் இடம்பிடித்து படுகேவலமாக ஆடியது.
இந்நிலையில், கடந்த ஐபிஎல் தொடரின் மோசமான நினைவுகளை அகற்ற இந்த முறை வெற்றி முனைப்போடு களமிறங்கவிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி தன் ட்விட்டர் ஹேண்டிலில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தடுமாற்றமடைந்தது தெரிந்தது. பந்துகளை சரியாக டைமிங் செய்ய முடியாமலும், பீட்டன் ஆகியும் இருவரும் திணறியது தெரிந்தது. இது மும்பை இந்தியன்ஸ்க்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சி அளித்தாலும் கேப்டன் திணறுவதும், பிரதான வீரர் இஷான் கிஷன் தடவுவதும் கவலையளிக்கக் கூடியதே.
ஜஸ்பிரித் பும்ரா இந்த சீசன் முழுதும் விளையாட முடியாது என்பதால் ஜோஃப்ரா ஆர்ச்சரை பெரிய அளவில் மும்பை இந்தியன்ஸ் அணி நம்பியிருக்கிறது. கடந்த 2022 சீசனில் ரூ.8 கோடிக்கு ஆர்ச்சரை மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. அதே விலைக்கு 2023 ஐபிஎல் தொடருக்காக அவரை தக்க வைத்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஆர்ச்சர் 35 ஐபிஎல் போட்டிகளில் 7.13 என்ற நல்ல எகானமி ரேட்டில் 46 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக 130 டி20 போட்டிகளில் 7.64 எகானமி ரேட்டில் 167 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
"Post bowling video Admin" - Presenting Jofra चा पहिला over in MI colors #OneFamily #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPL @JofraArcher MI TV pic.twitter.com/h2Y1KvEV1O
— Mumbai Indians (@mipaltan) March 31, 2023
27 வயதான ஆர்ச்சர் சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான 3 டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதே தொடரில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆர்ச்சர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பார்படோஸில் பிறந்த ஆர்ச்சர் தொடக்க எஸ்ஏ டி20 லீகில் எம்.ஐ கேப்டவுன் அணிக்காக ஆறு போட்டிகளில் பத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐபிஎல் 2023-ல் தனது பார்மை மீட்பதோடு அதே அச்சுறுத்தல் பவுலராக ஆஷஸில் திருமுகம் காட்ட இந்தத் தொடரை நல்ல நடைமேடையாகப் பயன்படுத்துவார் என்று நம்பப்படுகிறது.
தனது அபாரமான பந்துவீச்சைத் தவிர, ஆர்ச்சர் ஒரு லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் பயன்படுவார். 35 ஐபிஎல் போட்டிகளில் 157.26 ஸ்ட்ரைக் ரேட்டில் 195 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐபிஎல் 2023-ல் மும்பை இந்தியன்ஸ் முழு அணி: கேமரூன் கிரீன், ஜை ரிச்சர்ட்சன், பியூஷ் சாவ்லா, யான்சென், விஷ்ணு வினோத், ஷாம்ஸ் முலானி, மெஹல் வதேரா, ராகவ் கோயல், ரோஹித் சர்மா (கேப்டன்), டிம் டேவிட், ரமன்தீப் சிங், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டிவால்ட் ப்ரெவிஸ், ஜோப்ரா ஆர்ச்சர், அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், குமார் கார்த்திகேயா, ஹிருத்திக் ஷோகீன், ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், ஆகாஷ் மத்வால்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT