Published : 30 Mar 2023 03:05 PM
Last Updated : 30 Mar 2023 03:05 PM
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சூப்பர் ஸ்டார் தோனியை ஒருமுறை ஆஸ்திரேலியாவின் ஸ்டார் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்சி செய்ய நேரிட்டது. இது பற்றி ஸ்டீவ் ஸ்மித் ருசிகரத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
2017 ஐபிஎல் தொடரில்தான் ஸ்டீவ் ஸ்மித் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்தபோது, ஒரு வீரராக தோனியை கேப்டன்சி செய்ய நேரிட்டது. குறிப்பாக அணி உரிமையாளர்கள் தன்னை கேப்டன்சி செய்ய வேண்டும் என்று கேட்ட போது தனக்கு பதற்றம் அதிகரித்தது என்றார் ஸ்டீவ் ஸ்மித். 2017 சீசனில் எம்.எஸ்.தோனிக்குப் பிறகு புனே அணியின் கேப்டனாக ஸ்மித் நியமிக்கப்பட்டார். இதற்கு முந்தைய சீசனில் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 14 ஆட்டங்களில் 5ல் மட்டுமே வெற்றி பெற்று 7ம் இடத்தில் முடிந்தது. பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. அந்த சீசனில் ஸ்மித் சதம் அடித்த நிலையில், காயம் காரணமாக பாதியிலேயே நாடு திரும்பினார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் பேசிய ஸ்டீவ் ஸ்மித், கேப்டன்சியில் வளமான அனுபவம் பெற்ற எம்.எஸ்.தோனியிடமிருந்து பொறுப்பை ஏற்பது குறித்து ஆர்வமாக இருப்பதாகவும் தோனி தனக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் எவ்வாறு உதவினார் என்பதையும் எடுத்துரைத்தார் ஸ்மித்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஸ்மித் இது தொடர்பாகக் கூறிய போது, “நான் கேப்டனாக வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புவதாகக் கூற எனக்கு அழைப்பு வந்தபோது, கொஞ்சம் கடினமாக இருந்தது, ஆனால் அந்த சீசனில், எம்.எஸ்.தோனி அற்புதமாக இருந்தார். உங்களுக்குத் தெரியும், அவர் தன்னால் முடிந்த அனைத்து வழிகளிலும் உதவினார், அவர் ஒரு அரிதான மனிதர். ஆரம்பத்தில் அவரிடமிருந்து என்ன எதிர்பார்ப்பது என்று எனக்குத் தெரியவில்லை, உங்களுக்குத் தெரியும், எம்.எஸ். தோனி அவர் விளையாடிய ஒவ்வொரு அணிக்கும் கேப்டனாக இருந்தவர்.
இந்நிலையில்தான் என்னிடம் கேப்டன்சியை எடுத்துக் கொள்கிறாயா என்று அணி நிர்வாகம் கேட்டது. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது. அதாவது என்னைக் கேப்டனாக நியமிப்பது குறித்து தோனியிடம் முதலில் பேசி விட்டார்களா? இல்லையா? என்பதே எனக்குத் தெரியவில்லை. ஆனால் எப்படியோ பிரச்சனைகளைப் பேசித் தீர்த்தபோது தோனி ஓர் அற்புதமான மனிதர் என்பது புரிந்தது.
அந்த ஆண்டு அவர் எனக்கு உதவிய விதமும், அந்த அணியை வழிநடத்திய விதமும் நம்பமுடியாதது. ஆமாம், என்னால் அவருக்கு போதுமான அளவு நன்றி சொல்ல முடியவில்லை. எம்.எஸ் காட்டும் அமைதியை மட்டுமே நான் நினைக்கிறேன், அவரது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் நாங்கள் அவரிடம் அமைதியையும் நிதானத்தையும் கண்டோம். அவர் அவ்வளவு அமைதியாக இருந்தார். பிரஷர் சூழ்நிலைகளை எப்படி அமைதியாக எதிர்கொள்வது என்பதை நான் எம்.எஸ்.தோனியிடம் அந்த சீசனில் கற்றுக் கொண்டேன்” என்று ஸ்டீவ் ஸ்மித்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT