Published : 15 Mar 2023 10:08 PM
Last Updated : 15 Mar 2023 10:08 PM

நிமிர்ந்து நில்.. துணிந்து செல்.. | நீச்சல் குளத்தில் நடைபயிற்சி செய்த ரிஷப் பந்த்

ரிஷப் பந்த் | கோப்புப்படம்

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், நீச்சல் குளத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். விபத்தினால் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் மீண்டு வருவதை குறிப்பிடும் வகையில் இந்த வீடியோ உள்ளது.

2022, டிசம்பர் 30-ம் தேதி டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் தனியாக பயணித்த போது சாலையின் இடையே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அதில் சிக்கி இருந்த அவரை அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக மீட்டனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்தில் அவருக்கு நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. வலது முழங்காலில் தசைநார் கிழிந்தது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டது. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். அவர் களம் திரும்ப ஓராண்டு காலம் ஆகும் என சொல்லப்படுகிறது.

“சிறிய, பெரிய விஷயங்கள் மற்றும் அதற்கு இடையில் உள்ள அனைத்திற்கும் நன்றியுடன்” என பந்த் குறிப்பிட்டுள்ளார். வரும் 31-ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் சீசனில் அவர் பங்கேற்கவில்லை. இருந்தாலும் டெல்லி அணியுடன் அவர் பயணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x