Published : 12 Mar 2023 12:52 PM
Last Updated : 12 Mar 2023 12:52 PM
அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அகமதாபாத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் விராட் கோலி சதம் பதிவு செய்துள்ளார். 2019-க்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் ரன் குவிப்பில் ஈடுபடுபவர்களில் கோலி முதல் இடத்தில் இருப்பவர். அதன் காரணமாக அவரை ரன் மெஷின் என அழைப்பது வழக்கம். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் சதம் பதிவு செய்துள்ளார்.
நேற்று அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் கோலி அரைசதம் கடந்தார். சுமார் 423 நாட்களுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்த அரைசதமாக இது அமைந்தது. அப்போது முதலே 'கோலியின் அடுத்த சதம் லோடிங்' என ரசிகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள 28-வது சதமாக இது அமைந்துள்ளது. 241 பந்துகளில் சதம் கடந்தார் கோலி. இதில் 5 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும். அற்புதமான டெஸ்ட் கிரிக்கெட் சதகமாக இது அமைந்துள்ளது. இந்த இன்னிங்ஸ் முழுவதும் நேர்த்தியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருகிறார். ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அனைத்து பார்மெட்டிலும் அவர் பதிவு செய்துள்ள 75-வது சதம் இது.
The Man. The Celebration.
Take a bow, @imVkohli #INDvAUS #TeamIndia pic.twitter.com/QrL8qbj6s9— BCCI (@BCCI) March 12, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT