Published : 11 Mar 2023 09:18 PM
Last Updated : 11 Mar 2023 09:18 PM

“உங்க ஆட்டத்தை சிறப்பா தொடருங்க கோலி!” - அரைசதத்தை கொண்டாடும் ரசிகர்கள்... அடுத்த சதம் லோடிங்?

விராட் கோலி | கோப்புப்படம்

அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் விராட் கோலி நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த இன்னிங்ஸில் அவரது பேட்டிங் அணுகுமுறை கடந்த போட்டிகளுடன் ஒப்பிடும்போது முற்றிலும் வேறு ரகமாக உள்ளது. இந்நிலையில், அவரது ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

“உங்க ஆட்டத்தை சிறப்பா தொடருங்க கோலி” என்பது உட்பட அவரது புகழைப் போற்றும் பதிவுகள் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்படுவதை பார்க்க முடிகிறது. இந்த இன்னிங்ஸில் 128 பந்துகளில் 59 ரன்களை எடுத்துள்ளார் கோலி. இதில் 5 பவுண்டரிகள் அடங்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 13 இன்னிங்ஸிற்கு பிறகு அவர் அரைசதம் பதிவு செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 423 நாட்களுக்கு பிறகு அவர் பதிவு செய்துள்ள அரைசதம் இது. அவர் சதம் பதிவு செய்ய வேண்டுமெனவும் ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

கடைசியாக கடந்த 2019 நவம்பரில் வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் பதிவு செய்திருந்தார் கோலி. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்காவது நாளில் கோலி அந்த மூன்று இலக்க ரன்களை எட்டினால் அது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 28-வது சதகமாக அமையும்.

— Prayag (@theprayagtiwari) March 11, 2023

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x