Published : 25 Sep 2017 02:49 PM
Last Updated : 25 Sep 2017 02:49 PM
இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை இழந்த ஆஸி. கேப்டன் ஸ்மித், வெற்றி பெறும் நிலையிலிருந்து ஆட்டத்தைக் கோட்டை விடும் போக்கு கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.
ஞாயிறன்று இந்தூரில் நடைபெற்ற தொடரை முடிவு செய்யும் 3-ம் போட்டியில் விராட் கோலி தனது ஆதிக்கத்தை உறுதி செய்தார். 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் ஸ்மித் ஏமாற்றத்துடன் செய்தியாளர்களிடம் பேசும் போது, “எப்பவும் நல்ல நிலைக்கு வந்த பிறகு அதன் சாதகமாகப் பயன்படுத்தி கொள்ளாமல் விட்டு விடுகிறோம், இந்த ஆட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல. நாங்கள் தொடர்ந்து இதைப் பற்றி பேசியும் சிந்தித்தும் வருகிறோம், நாங்கள் விரும்பிய முடிவைப் பெற நாங்கள் எந்த இடத்தில் சரியாக ஆடுகிறோம் எங்கு தவறு செய்கிறோம் என்பது சரியாகப் பிடிபடவில்லை.
ஒருநாள் போட்டியாகட்டும், டெஸ்ட் போட்டியாகட்டும் இதே போக்குதான் அணியில் நீடிக்கிறது.
ஆஷஸ் தொடர் பற்றி இப்போது யோசிக்கவில்லை, அது டெஸ்ட் போட்டி, வேறு வடிவம், ஆனால் எந்த வடிவமாக இருந்தாலும் ஏதாவது போட்டியை வென்று வெற்றிப்பாதைக்குத் திரும்ப வேண்டும் என்றே உள்ளபடியே விரும்புகிறேன்.
போட்டிகளில் வெற்றி பெறத் தொடங்க வேண்டும் கடந்த 13 வெளிநாட்டு ஒருநாள் போட்டிகளில் 11-ல் தோற்றுள்ளோம். இது மிகவும் மோசமானது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புகழுக்கு இது நல்லதல்ல.
முடிவுகளை மாற்றி சில போட்டிகளில் வென்று வெற்றியை ருசிக்கும் பழகத்துக்கு வர வேண்டும் என்றே விரும்புகிறோம்” என்று கவலையுடன் தெரிவித்தார் ஸ்மித்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT