Published : 28 Sep 2017 03:30 PM
Last Updated : 28 Sep 2017 03:30 PM
பிரிஸ்டல் ஒருநாள் போட்டி முடிந்து இரவு விடுதி ஒன்றில் மது அருந்திய இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தெருச்சண்டையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தி சன் பத்திரிகை நடந்தது என்ன என்ற ரீதியீல் வீடியோ வெளியிட்டுள்ளது.
இதனால் பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடரில் ஆடுவது கேள்விக்குறியாகியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘ஹிட் ஃபார் சிக்ஸ்’ என்ற முதல்பக்கச் செய்தியில் தலைப்பிட்டு வெளியிடப்பட்ட வீடியோவில் ஸ்டோக்ஸ் இரண்டு நபர்களுடன் சண்டையிடுவது பதிவாகியுள்ளது, அதாவது ஒருவர் ஸ்டோக்ஸ் விட்ட குத்தில் தன் கையிலிருந்த பாட்டிலை தவற விடுகிறார்.
மேலும் ஒருவர் ‘போதும் ஸ்டோக்ஸ்’ போதும் ஸ்டோக்ஸ் என்று தொடர்ந்து கத்துவதும் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் உறுதி அளித்துள்ளார், ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டாலும் விசாரணை நடந்து வருகிறாது.
“நாங்கள் இப்போதுதான் ஸ்டோக்ஸ் சம்பந்தப்பட்ட இந்த வீடியோவைப் பார்த்தோம்” என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்தது.
நேற்று எவின் லூயிஸ் காட்டுக் காட்டிய ஒருநாள் போட்டியில் பென் ஸ்டோக்ஸ், இவருடன் தகராறில் இருந்த அலெக்ஸ் ஹேல்ஸ் இருவரும் நீக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் ஸ்டோக்ஸ் கூறுவது என்னவெனில், “நாங்கள் வளர்ந்தவர்கள், விவரம் அறிந்தவர்கள்தான், இரவு சாப்பாட்டுக்கு வெளியே செல்வோம், ஒன்றிரண்டு பாட்டில்கள் பீர் அருந்துவோம், எனக்கு 26 வயது, 14 வயதல்ல, இரவு உணவுடன் டயட் கோக் அருந்தும் பழக்கம் எனக்கில்லை” என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT