Published : 02 May 2017 10:29 AM
Last Updated : 02 May 2017 10:29 AM
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ராஸ்டன் சேஸ் சதத்தால் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட் கள் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது.
பார்படாசில் நேற்றுமுன்தினம் தொடங்கிய இந்த டெஸ்டில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களான பிராத்வெயிட் 9, ஹெட்மேயர் 1, ஹோப் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். 37 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் பொவலுடன் இணைந்த ராஸ்டன் சேஸ் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார்.
பொவல் 38 ரன்களில் முகமது அமிர் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய விஷால் சிங் 3, டவுரிச் 29 ரன்களில் வெளியேறினர். 154 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த நிலையில் கேப்டன் ஜேசன் ஹோல்டருடன் இணைந்து, ராஸ்டன் சேஸ் நிதானமாக விளையாடினார்.
அவர் 165 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் தனது 2-வது சதத்தை அடித்தார். மறுமுனை யில் சிறப்பாக ஜேசன் ஹோல்டர் 115 பந்துகளில் அரை சதம் அடித் தார். இந்த ஜோடி சிறப்பாக செயல் பட்டதால் முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 89 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது.
ராஸ்டன் சேஸ் 131, ஜேசன் ஹோல்டர் 58 ரன்களுடன் ஆட்ட மிழக்காமல் களத்தில் இருந் தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அமிர், முகமது அபாஸ் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT