Published : 23 Feb 2023 11:33 PM
Last Updated : 23 Feb 2023 11:33 PM
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறியுள்ளது இந்திய அணி. 173 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையாவிட்டாலும் கேப்டன் ஹர்மன்பிரீத், ஜெமிமாவுடன் அபார கூட்டணி அமைத்தார். இருவரும் 69 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
24 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஜெமிமா வெளியேறினார். தொடர்ந்து வந்த ரிச்சா கோஷ் உடன் 35 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஹர்மன்பிரீத். 34 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்மன்பிரீத், ரன் அவுட் ஆனார்.
இந்திய மகளிர் அணி 15-வது ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை கடந்தது. நன்கு செட்டில் ஆன நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் களத்தில் இருந்தார். 15வது ஓவரின் நான்காவது பந்தை ஆஸி வீராங்கனை ஜார்ஜியா வேர்ஹாம் ஃபுல் டெலிவரியாக வீச, ஹர்மன்பிரீத் அதை லெக் சைடில் ஸ்வீப் ஷாட் ஆடினார். பவுண்டரி நோக்கி சென்ற அந்த பந்தில் இரண்டு ரன்கள் முற்பட்டபோது அவரின் பேட் சரியாக கிரீஸை தொட முடியாததால் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார்.
தொடர்ந்து நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் ரிச்சா கோஷ், பெரிய ஷாட் ஆட முயன்று 17 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்திய அணி 16 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி நான்கு ஓவர்களில் 38 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இருந்தும் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.
வெற்றிப்பாதையில் இந்திய அணி இருந்த நிலையில் ஹர்மன்பிரீத்தின் ரன் அவுட் ஆட்டத்தில் திருப்புமுனையாக இருந்தது. ஹர்மன்பிரீத்தின் ரன் அவுட் 2019 கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதியில் எம்எஸ் தோனியின் ரன்-அவுட்டை நினைவூட்டும் வகையில் அமைந்தது.
இந்த இரண்டு ரன் அவுட்களும் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியின் முக்கியமான கட்டத்தில் நிகழ்ந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் இரண்டு பேருமே அடித்த ஷாட்கள் லெக் சைட் நோக்கி அடிக்கப்பட்டது. தோனி மற்றும் ஹர்மன்பிரீத்தின் ஜெர்சி எண்களும் ஏழு. துரதிர்ஷ்டவசமாக, இந்தியா இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெறவில்லை.
இந்த ஒற்றுமைகளை வைத்து தோனி மற்றும் ஹர்மன்பிரீத்தை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள்.
India's No.7 taking India close in a semi-final of an ICC tournament and ending in a run-out...#INDWvAUSW #HarmanpreetKaur #dhoni pic.twitter.com/2VCwbEzKTs
— Nitturu Naveen (@nitturu_naveen) February 23, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT