Published : 23 Feb 2023 03:55 PM
Last Updated : 23 Feb 2023 03:55 PM
மும்பை: எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இது அனைத்தும் நிச்சயம் மாறும். இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரை இந்த ஆண்டு வெல்ல வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த இரண்டுக்கும் இடையே ஆசிய கோப்பை தொடரும் உள்ளது. அந்த பட்டமும் இந்தியாவுக்கு திரும்பினால் சிறப்பாக இருக்கும்.
அதே போல இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் அது வீராங்கனைகளுக்கு இறுதிப்போட்டியில் அதீத ஊக்கத்தை கொடுக்கும்” என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1983-ல் இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்ற அணியில் சுனில் கவாஸ்கர் விளையாடி இருந்தார். ஆல் டைம் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என கவாஸ்கர் அறியப்படுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT