Published : 20 May 2017 10:13 AM
Last Updated : 20 May 2017 10:13 AM
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து தான் இன்னும் ஓய்வு பெறவில்லை என தென் ஆப்ரிக்க அணியின் அதிரடி வீரரரான டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து டி வில்லியர்ஸ் விலகினார். காயத்தில் இருந்து குணமடைந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடினார்.
ஆனால் அதேவேளையில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை டி வில்லியர்ஸ் புறக்கணித்தார். வரும் ஜூலை மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடரையும், செப்டம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற உள் டெஸ்ட் தொடரை யும் புறக்கணிக்கும் முடிவிலேயே டி வில்லியர்ஸ் உள்ளார்.
இதற்கிடையே அதிக பணி சுமை காரணமாக இந்த ஆண்டு முழுவதும் குறுகிய வடிவிலான தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக டி வில்லியர்ஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தீவிரமாக தயாராகி வரும் அவர் கூறியதாவது:
டெஸ்ட் போட்டிகளில் இருந்து இன்னும் நான் ஓய்வு பெறவில்லை. ஆனால் நான் எடுத்த முடிவை மாற்றப் போவதில்லை. இங்கிலாந்து தொடரில் நான் விளையாட வாய்ப்பில்லை.
கடந்த ஆண்டு எனது வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவை நான் எடுத்தேன். தென் ஆப்ரிக்க அணிக்கு கோப்பைகளை வென்று கொடுக்கவும், சிறந்த அணியில் அங்கம் வகிக்கவும் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவ்வாறு டி வில்லியர்ஸ் கூறினார்.
தென் ஆப்ரிக்க அணி அடுத்த ஆண்டில் இந்தியா, ஆஸ்தி ரேலியா அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டி களில் விளையாட உள்ளது. இந்த தொடர்களில் டி வில்லியர்ஸ் விளை யாடக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT