Published : 19 Feb 2023 09:55 PM
Last Updated : 19 Feb 2023 09:55 PM

ஆஸி.க்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணியில் கே.எல்.ராகுல்

இந்திய அணி வீரர்கள்

மும்பை: பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் எஞ்சியுள்ள கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரண்டு அணிகளும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகின்றன. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கோப்பையை தக்கவைத்துள்ளது இந்தியா. இந்த தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1 மற்றும் மார்ச் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷ்ரேயஸ் ஐயர் , சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் கே.எல்.ராகுல் சொல்லிக் கொள்ளும்படி பேட் செய்யவில்லை. இருந்தபோதும் அவருக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அது குறித்து பலரும் தங்கள் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. மார்ச் 17-ம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி நடைபெறுகிறது.

ஒருநாள் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், ஜெய்தேவ் உனத்கட்.

முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அணியை ஹர்திக் பாண்டியா வழி நடத்த உள்ளதாக தகவல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x