Published : 17 Feb 2023 06:24 PM
Last Updated : 17 Feb 2023 06:24 PM
மும்பை: நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் எதிர்வரும் மார்ச் 31-ம் தேதி அன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை செய்யவுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்தப் போட்டி அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. 10 அணிகளும் 7 போட்டிகள் சொந்த மைதானத்திலும், 7 போட்டிகள் வெளியூரிலும் லீக் சுற்றில் விளையாட உள்ளன.
மொத்தம் 70 லீக் போட்டிகள். கடைசி லீக் போட்டி மே 21-ம் தேதி நடைபெறுகிறது. மே 28-ம் தேதி இறுதிப்போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
12 மைதானங்களில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள்: அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, கவுகாத்தி மற்றும் தர்மசாலாவில் போட்டிகள் நடைபெறுகின்றன. கடந்த சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. போட்டிகள் அனைத்தையும் ஜியோ சினிமா மொபைல் செயலியில் இலவசமாக பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2023 குரூப்கள்: 10 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. | குரூப் ஏ: மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்டஸ். | குரூப் பி: சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகள்:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT