Published : 17 Feb 2023 06:10 AM
Last Updated : 17 Feb 2023 06:10 AM
சென்னை: சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 506-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமித் நாகல், 343-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் ஜேசன் ஜங்கை எதிர்த்து விளையாடினார்.
ஒரு மணி நேரம் 56 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 3-6, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் கால் இறுதி சுற்றில் 313-ம் நிலை வீரரான கிரேட் பிரிட்டனின் ஜே கிளார்க்குடன் மோதுகிறார் சுமித் நாகல்.
ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில்இந்தியாவின் ராம் பாலாஜி, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி சகநாட்டைச் சேர்ந்த சுமித் நாகல், முகுந்த் சசிகுமார் ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி நேரம்12 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராம்பாலாஜி, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 7-6, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. அரை இறுதி சுற்றில் ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆஃப்னர், குரோஷியாவின் நினோ செர்டருசிக் ஜோடியை சந்திக்கிறது ராம் பாலாஜி, ஜீவன் நெடுஞ்செழியன் இணை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT