Published : 16 Feb 2023 02:58 PM
Last Updated : 16 Feb 2023 02:58 PM

“சூரிய உதயம்... உங்களை சந்தித்தது அற்புதமாக இருந்தது சூர்யா” - தமிழில் சச்சின் ட்வீட்

சூர்யா மற்றும் சச்சின்

மும்பை: நடிகர் சூர்யாவை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சந்தித்துள்ளார். இதுகுறித்து தமிழில் சச்சின் ட்வீட்டும் செய்துள்ளார். இந்தச் சந்திப்பு இன்று நடந்துள்ளதாக தெரிகிறது. ‘மரியாதை மற்றும் அன்பு’ என சச்சின் உடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாவில் சூர்யா இன்று காலை பகிர்ந்திருந்தார்.

‘மாஸ்டர் பிளாஸ்டர்’ என கிரிக்கெட் உலகில் அறியப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் என மொத்தம் 100 சதங்களை சர்வதேச கிரிக்கெட் உலகில் பதிவு செய்துள்ளார். 1989 முதல் 2013 வரையிலான இந்த 24 ஆண்டு காலத்தில் மூன்று தலைமுறையை சேர்ந்த வெவ்வேறு கிரிக்கெட் வீரர்களுடன் அவர் விளையாடி உள்ளார். அந்த 24 ஆண்டுகளில், 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், 34,357 ரன்கள் மற்றும் 201 விக்கெட்டுகளையும் சச்சின் கைப்பற்றி உள்ளார்.

அதேபோல, தமிழ் திரைத்துறையில் உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ளார் நடிகர் சூர்யா. தற்போது சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தச் சூழலில் நடிகர் சூர்யா, சச்சின் டெண்டுல்கரை சந்தித்துள்ளார்.

“இன்று காலை சூரிய உதயம் விசேஷமாக இருந்தது. உங்களை சந்தித்தது அற்புதமாக இருந்தது சூர்யா. மனமார்ந்த வாழ்த்துகள்” என சச்சின் தமிழில் ட்வீட் செய்துள்ளார். அண்மையில் கிரிக்கெட் வீரர் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்த போதும் சச்சின் தமிழில் ட்வீட் செய்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x