Published : 13 Feb 2023 09:04 AM
Last Updated : 13 Feb 2023 09:04 AM
மும்பை: நடிகர் மாதவனின் மகனும், நீச்சல் விளையாட்டு வீரருமான வேதாந்த், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் 5 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். இதனை மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பலரும் வேதாந்துக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய சினிமா நடிகர்களில் ஒருவரான மாதவனின் மகன் வேதாந்த், சிறு வயது முதலே நீச்சல் விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி செய்து வருகிறார். 17 வயதான அவர் இந்திய நாட்டின் சார்பில் சர்வதேச அளவிலான நீச்சல் விளையாட்டு தொடர்களில் பங்கேற்று வருகிறார். கடந்த ஆண்டு டேனிஷ் ஓபன் தொடரில் 1500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் மற்றும் 800 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பந்தயத்தில் தங்கப் பதக்கமும் வென்றிருந்தார்.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023-ல் மகாராஷ்டிரா அணிக்காக வேதாந்த் பங்கேற்றார். இதில் 5 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை அவர் வென்றுள்ளார். 100 மீட்டர், 200 மீட்டர், 1500 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் என பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வேதாந்த் வென்றுள்ளார்.
With gods grace -Gold in 100m, 200m and 1500m and silver in 400m and 800m . pic.twitter.com/DRAFqgZo9O
— Ranganathan Madhavan (@ActorMadhavan) February 12, 2023
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023: மத்திய பிரதேசம் மற்றும் புது டெல்லியில் நடைபெற்ற இந்த தொடரில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 5,000 வீரர்கள் பங்கேற்றனர். இதில் மகாராஷ்டிரா அணி 161 பதக்கங்களை வென்று முதல் இடத்தை பிடித்தது. 56 தங்கம், 55 வெள்ளி மற்றும் 50 வெண்கல பதக்கங்கள் அடங்கும். தமிழ்நாடு 52 பதக்கங்களை வென்று 8-வது இடத்தை பிடித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT