Published : 09 Feb 2023 05:20 PM
Last Updated : 09 Feb 2023 05:20 PM
நாக்பூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி ஆட்டத்தை நிறைவு செய்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்களுடன் களத்தில் உள்ளார். கே.எல்.ராகுல் 20 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
நாக்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 177 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. ஜடேஜா 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருந்தனர்.
தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பேட் செய்ய களம் கண்டது. கேப்டன் ரோகித் மற்றும் துணை கேப்டன் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக இன்னிங்ஸை தொடங்கினர். முதல் விக்கெட்டிற்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ராகுல், 71 பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்களை எடுத்து வெளியேறினார். ரோகித், 69 பந்துகளில் 56 ரன்கள் எடுத்துள்ளார்.
முதல் நாள் ஆட்டம் முடிய 7 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், அஸ்வின் பேட் செய்ய வந்தார். இதில் 5 பந்துகளை அவர் எதிர்கொண்டார். பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் முதல் நாளன்று தனது ஆதிக்கத்தை செலுத்தி உள்ளது இந்தியா.
177 ரன்களில் சுருண்ட ஆஸி. - முன்னதாக, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்காக வார்னர் மற்றும் கவாஜா, தொடக்க வீரர்களாக களம் கண்டனர். இருவரும் ஒரு ரன் எடுத்த நிலையில் வெளியேறினர். கவாஜாவை சிராஜ் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார். வார்னரை போல்ட் ஆக்கினார் ஷமி.
தொடர்ந்து லபுஷேன் மற்றும் ஸ்மித் என இருவரும் நிதானமாக இன்னிங்ஸை அணுகி அசத்தினர். இருவரும் 82 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். உணவு நேர இடைவேளைக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி சரிந்தது. லபுஷேன், 49 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் அபாரமாக அவரை ஸ்டம்பிங் செய்திருந்தார். அடுத்த பந்தில் மேட் ரென்ஷாவை வெளியேற்றினார் ஜடேஜா. தொடர்ந்து 37 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித்தையும் காலி செய்தார்.
பின்னர் அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மர்பி, ஹேண்ட்ஸ்காம்ப் மற்றும் போலாந்த் ஆகியோர் விக்கெட்டை இழந்தனர். முதல் இன்னிங்ஸில் 63.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. ஜடேஜா 22 ஓவர்கள் வீசி 47 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 8 மெய்டன் ஓவர்கள் அடங்கும். அஸ்வின், 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Stumps on Day of the first #INDvAUS Test!#TeamIndia finish the day with 77/1, trailing by 100 runs after dismissing Australia for 177
We will see you tomorrow for Day 2 action!
Scorecard - https://t.co/edMqDi4dkU #INDvAUS | @mastercardindia pic.twitter.com/yTEuMvzDng— BCCI (@BCCI) February 9, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT