Published : 08 Feb 2023 05:42 AM
Last Updated : 08 Feb 2023 05:42 AM
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி சார்பில் மகளிர் கல்லூரிகள் இடையேயான வாஸ்போ விளையாட்டு போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த போட்டி நடத்தப்படவில்லை.
இந்த ஆண்டுக்கான மகளிர் கல்லூரிகள் இடையேயான வாஸ்போ வினளயாட்டு போட்டிகள் வரும் 16, 17-ம் தேதிகளில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் அணிகளுக்கு நுழைவு கட்டணம் எதுவும்கிடையாது.
வாலிபால், கூடைப்பந்து, செஸ், பாட்மிண்டன், பால் பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் ஆகிய 6 விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. வாலிபால், கூடைப்பந்து போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். பால் பாட்மிண்டன் போட்டிக்கு முறையே ரூ.10,000, ரூ.7,000, ரூ.5000 கிடைக்கும். செஸ், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன் ஆகிய விளையாட்டுகளில் முதல் 3 இடங்களுக்கு ரூ. 5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT