Last Updated : 26 May, 2017 09:04 AM

 

Published : 26 May 2017 09:04 AM
Last Updated : 26 May 2017 09:04 AM

சாம்பியன்ஸ் டிராபியை வெல்வோம்: ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை

இங்கிலாந்தில் வரும் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பட்டம் வெல்வோம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி கடந்த 2006 மற்றும் 2009-ல் பட்டம் வென்றிருந்தது. 3-வது முறையாக பட்டம் வெல்லும் கனவுடன் அந்த அணி கடந்த 2013-ம் ஆண்டு தொடரை சந்தித்த போது லீக் சுற்றுடன் வெளியேறியது.

இம்முறை ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை சந்திக்கிறது ஆஸ்திரேலிய அணி. கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணி களில் ஒன்றாக ஆஸ்திரேலியாவும் உள்ளது. கேப்டனாக ஸ்மித் பங்கேற்கும் முதல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இதுவாகும்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, நியூஸிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளும் உள்ளன. ஆஸ்திரேலியா தனது முதல் ஆட்டத்தில் 2-ம் தேதி நியூஸிலாந்துடன் மோதுகிறது.

முன்னதாக இரு பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா பங்கேற்கிறது. முதல் பயிற்சி ஆட்டத்தில் இன்று இலங்கையுடனும், அடுத்த பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானுடனும் ஆஸ்திரேலியா மோதுகிறது. இந்நிலையில் லண்டனில் நேற்று நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:

கடந்த இரு மாதங்களாக ஐபிஎல் தொடர் எனக்கு சிறந்த வகையில் அமைந்தது. சாம்பியன்ஸ் டிராபி தொடரால் நாங்கள் உற்சாகம் அடைந்துள்ளோம். கிரிக்கெட் விளையாடுவதற்கு இங்கிலாந்து மிகச்சிறந்த இடம்.

இங்கு விளையாடுவது எங்களுக்கு பெரிய ஊக்கம் தான். ஓய்வு இல்லாமல் தொடர்ச்சியான போட்டிகளில் பங்கேற்ற போதும் சிறப்பாகவே உணர்கிறேன். உடல் மற்றும் மனநிலை சிறந்த நிலையில் உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இதுபோன்ற தொடர் உண்மையிலேயே முக்கிய மானதுதான். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி சிறந்த சாதனைகளை படைத்துள் ளது. அதை தக்கவைத்துக் கொள் வோம் என்ற நம்பிக்கை உள்ளது.

நாங்கள் கோப்பையை வெல்ல விரும்புகிறோம். அதில்தான் எங்களது முழுகவனமும் இருக்கும். 50 ஓவர்கள் போட்டியில் நாங்கள் விளையாடி 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது. எனினும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்களில் நாங்கள் குழுவாக இணைந்து விளையாட உள்ளோம்.

பயிற்சி ஆட்டங்கள் அணியில் உள்ள சில வீரர்களுக்கு இங்குள்ள சூழ்நிலையில் பேட் செய்ய வாய்ப்பு வழங்கும். பேட்டிங்கில் வலுவான வரிசையை நாங்கள் கொண்டுள்ளோம். பயிற்சி ஆட்டங் களில் வீரர்கள் எப்படி செயல் படுகிறார்கள் என்பதை காண வேண்டும்.

இங்கிலாந்து உள்நாட்டில் சிறப்பாக விளையாடக்கூடிய அணி. அந்த அணியில் வெற்றி தேடித்தரக்கூடிய வீரர்கள் பலர் உள்ளனர். இதேபோல் சிறப்பாக செயல்படக்கூடிய மற்ற அணிகளும் உள்ளன. தென் ஆப்ரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் உலகத் தரம் வாய்ந்தவை. போட்டி நடைபெறும் தினத்தில் மிகச் சிறப்பாக விளை யாடக்கூடிய அணிகளும் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x