Published : 01 Feb 2023 03:45 PM
Last Updated : 01 Feb 2023 03:45 PM
பியூனஸ் அயர்ஸ்: கடந்த டிசம்பர் மாதம் உலகக் கோப்பையை வென்றதும் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடங்கியதாக தெரிவித்துள்ளார் அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி. இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்ற உலக பிரபலங்களில் மெஸ்ஸியும் ஒருவர். உலகக் கோப்பையுடன் அவர் கொடுத்திருந்த உற்சாக போஸ் இன்ஸ்டாவில் அதிக லைக்குகளை அள்ளி இருந்தது.
கடந்த டிசம்பர் மாதம் பிரான்ஸ் அணியுடன் அர்ஜென்டினா இறுதிப் போட்டியில் விளையாடியது. பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரான்ஸை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா வீழ்த்தி இருந்தது. இந்தத் தொடரில் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை மெஸ்ஸி வென்றார். மொத்தம் 7 கோல்களை அவர் உலகக் கோப்பை 2022 தொடரில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், அவர் அண்மையில் பண்பலை ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில்தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு முடங்கியதாக தெரிவித்துள்ளார்.
“எனது இன்ஸ்டாகிராம் பக்கம் உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு அப்படியே சில நாட்களுக்கு முடங்கி இருந்தது. அதற்கு காரணம் எனக்கு குவிந்த மெசேஜ்கள். மில்லியன் கணக்கில் இன்ஸ்டாவில் எனக்கு மெசேஜ் வந்திருந்தது. அதுதான் அதற்கு காரணம்.
அதே போல எனது இன்ஸ்டா கணக்கை நான்தான் நிர்வகித்து வருகிறேன். அதை நிர்வகிக்க தனியாக யாரையும் நான் பணி அமர்த்தவில்லை. எந்தவொரு நிறுவனமும் எனது கணக்கை நிர்வகிக்கவில்லை” என மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT