Last Updated : 24 Dec, 2016 10:45 AM

 

Published : 24 Dec 2016 10:45 AM
Last Updated : 24 Dec 2016 10:45 AM

பயிற்சி பெறுவதற்கான உபகரணங்கள் இல்லை: அரசு உதவியை எதிர்நோக்கும் வீல்சேர் கூடைப்பந்து அணி

விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைக்க தனிப்பட்ட வீரர்கள் பலரும் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பது நம் நாட்டில் சகஜமான விஷயமாகி விட்டது. இந்நிலையில் ஒரு அணியே தங்களின் பயிற்சிக்கும் போட்டிகளில் பங்கேற்பதற்கும் அரசின் உதவிக்காக காத்திருக்கிறது. தமிழ்நாடு வீல்சேர் கூடைப்பந்து அணிதான் அந்த அவலமான நிலையில் உள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் ஜெஜெ ஸ்டேடியத்தில் வரும் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெ றவுள்ள 3-வது தேசிய அளவிலான வீல்சேர் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழக அணி யில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யாருக்கும் சொந்தமாக வீல்சேர் கூட இல்லை. இருப்பினும் இப் போட்டித்தொடரில் வென்றாக வேண்டும் என்ற லட்சியத்துடன் அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள் ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு வீல்சேர் கூடைப்பந்து அசோசியேஷன் பொருளாளர் வினோலியா வைலட் கூறியதாவது:

‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படை யில், திருச்சி வீரர் ஒருவருக்கு நன்கொடையாளர் மூலம் ஒரு வீல்சேர் கிடைத்தது. அதேபோல், பெண்கள் அணி வீராங்கனை ஒருவர் தனிப்பட்ட முறையில் நன்கொடையாளர் மூலம் வீல்சேர் பெற்றுள்ளார். இவர்கள் இருவரைத் தவிர தேசிய போட்டியில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்கும் அணியில் உள்ள வேறு யாருக்கும் சொந்தமாக வீல்சேர் கிடையாது. வீல்சேர் கூடைப்பந்து பெடரேஷன் ஆஃப் இந்தியா வைத்துள்ள வீல்சேர்களைக் கேட்டுப் பெற்றுத்தான், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள வெளியரங்க மைதானத்தில் வாரந்தோறும் 2 நாட்கள் பயிற்சி பெற்று வருகிறோம்.

மாற்றுத் திறனாளி என்பதால் ஏற்கெனவே பல்வேறு இன்னல் களைச் சந்தித்து வரும் நிலையில், வீல்சேர் வாங்க செலவு செய்ய முடியாததால், எஞ்சிய நாட்களில் பயிற்சி பெற முடியாத நிலையில் வீரர்கள்- வீராங்கனைகள் உள்ளனர். வீல்சேர், தங்குமிடம், உணவு ஆகிய தேவைகளைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் அணி வீரர்கள் மட்டுமின்றி வீட்டிலேயே முடங்கியுள்ள பிற மாற்றுத் திறனாளிகளும் இந்த விளையாட்டில் ஆர்வமாக ஈடுபடுவர்.

நன்கொடையாளர்களைத் தாண்டி தன்னார்வலர்கள், பார்வை யாளர்கள், ஊடகங்கள், பொது மக்கள் ஆகியோரது ஆதரவும், அரசின் உதவியும் இந்த விளை யாட்டின் வளர்ச்சிக்கு மிக அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x