Published : 16 Jan 2023 06:18 AM
Last Updated : 16 Jan 2023 06:18 AM
சென்னை: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. திருவனந்தபுரத்தில் நேற்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 110 பந்துகளில் 166 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் டாப் ஐந்து வீரர்களில் ஒருவராக அவர் இணைந்தார்.
கடந்த 2008 முதல் இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கோலி விளையாடி வருகிறார். மொத்தம் 259 இன்னிங்ஸில் 12,754 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 64 அரைசதம் மற்றும் 46 சதங்கள் அடங்கும். திருவனந்தபுரத்தில் இலங்கைக்கு எதிராக 63 ரன்கள் கடந்த போது இந்த மைல்கல்லை அவர் எட்டினார்.
முன்னதாக, ஐந்தாவது இடத்தில் 12,650 ரன்களுடன் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே இருந்தார். அவரைதான் கோலி இப்போது முந்தியுள்ளார். இது தவிர சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் 21 சதங்கள், இலங்கைக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் 10 சதங்கள் போன்ற சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT