Published : 11 Jan 2023 09:29 AM
Last Updated : 11 Jan 2023 09:29 AM
சிட்னி: இந்தியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியாவில் ஆடும் ஆஸ்திரேலியா அணி, இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இதில் இந்தியப் ஆடுகளங்களை கணக்கில் கொண்டு 4 ஸ்பின்னர்களைத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக நாக்பூரில் பிப்ரவரி 9 அன்று துவங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஸ்பின் பிட்ச்களுக்கு ஏற்றவாறு நேதன் லயனுடன் ஆஷ்டான் ஆகர், டாட் மர்ஃபி, மிட்செல் ஸ்வெப்சன் ஆகிய ஸ்பின்னர்கள் அந்த அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விக்டோரியாவைச் சேர்ந்த ஆஃப் ஸ்பின்னர் டாட் மார்ஃபி இதுவரை டெஸ்ட் போட்டியில் விளையாடியது இல்லை.
மேத்யூ ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகிய பேட்டர்கள் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்வதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் தேர்வு செய்யப்படவில்லை. ஒரே விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு காயம் ஏற்பட்டால் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வார் என தெரிகிறது. அதிவேக பவுலர் லான்ஸ் மோரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாக்பூர் பிட்சைப் பார்த்த பிறகு கூடுதல் வேகம் தேவைப்பட்டால் இவரை ஆடும் லெவனில் எடுக்க வாய்ப்புண்டு. அதே போல் ஸ்காட் போலண்டும் அணியில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் அசிஸ்டெண்ட் கோச் டேனியல் வெட்டோரி என்பதால் இந்தியப் பிட்ச்களில் இந்த முறை ஆஸ்திரேலியா சோடைப் போகத் தயாராக இல்லை என்று தெரிகிறது. ஒருமுறை ஆடம் கில்கிறிஸ்ட் கேப்டன்சியில் கங்குலி தலைமையிலான இந்திய அணியை ஆஸ்திரேலியா 2-1 என்று இங்கு வந்து தொடரை வென்றதே கடைசியாக ஆஸ்திரேலியா இங்கு தொடரை வென்ற தருணமாகும். அப்போது ஸ்பின்னர்கள் இல்லாவிட்டாலும் ஆஃப் கட்டர்களை வீசியே இந்திய அணியை கவிழ்த்தனர்.
ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பாட் கமின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட், ஆஷ்டன் ஆகர், லான்ஸ் மோரிஸ், மிட்செல் ஸ்வெப்சன், மேட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், டாட் மர்ஃபி.
4 டெஸ்ட் போட்டிகளின் அட்டவணை
Four spinners included in the Aussie squad for the four-Test tour #INDvAUS pic.twitter.com/1ITzFS0xA1
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT