Published : 23 Dec 2016 07:10 PM
Last Updated : 23 Dec 2016 07:10 PM
சென்னை டெஸ்ட் போட்டியில் 1 ரன்னில் இரட்டை சத வாய்ப்பை நழுவ விட்டு வெறுப்படைந்த கே.எல்.ராகுல், அடுத்த முறை கருண் நாயர், சேவாக் முச்சத சாதனையை முறியடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர் கூறியதாவது:
இது ஒரு வேடிக்கையான விளையாட்டு. காயங்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்குத் திரும்பினேன். ரன் எடுக்காமல் அவுட் ஆனேன், உடனே நான் அந்த ராகுல் இல்லை என்று முடிவுகட்டினர். எனவே இது கஷ்டமாக இருந்தது. நல்ல வேளையாக சென்னையில் ரன்கள் எடுத்தேன். இரட்டைச் சதத்திற்கு ஒரு ரன் இருக்கும் போது ஆட்டமிழந்தேன்.
சில தருணங்களில் கிரிக்கெட் ஆட்டத்தில் வீரர்கள் ஆர்வம் மிகுதியாக இருக்கும். முதல் ரன்னை எடுக்கும் போது, அல்லது 100, 200 மைல்கல்லை எட்டும் போது ஆர்வம் ஏற்படுவது இயல்புதான்.
ஆனால் இம்முறை பவுலர் மிடில் அல்லது ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசுவார் என்றே எதிர்பார்த்தேன், அவர் வைடாக வீசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. பாதி தூரம் பேட்டைக் கொண்டு சென்ற பிறகு விலக்க நினைத்தேன் ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.
எனவே தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளேன். அடுத்த முறை களமிறங்கும் போது கருண் நாயர் அல்லது சேவாக் சாதனையை முறியடிக்க முயற்சி செய்வேன். கருண் நாயர் தன் முச்சதத்தினால் அணி வீரர்களுக்கு அளவுகோலை உயர்த்தியுள்ளார். அவர் முதல் சதமே முச்சதம். இப்படிப்பட்ட போட்டி மனப்பான்மை அணியில் இருப்பது நல்லதுதானே.
இவ்வாறு கூறினார் ராகுல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT