Published : 06 Dec 2016 06:37 AM
Last Updated : 06 Dec 2016 06:37 AM
பிசிசிஐ-யின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் முன்னாள் நீதிபதி லோதா தலைமையிலான குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரைகளில் முக்கிய மானவையான ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்குரிமை, 70 வயதுக்கு மேற்பட்டோர் நிர்வாக பதவிகளில் இருக்கக்கூடாது. தலைவர் உள் ளிட்ட முக்கிய பதவிகளில் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கக் கூடாது ஆகியவற்றை அமல்படுத்துவதில் பிசிசிஐ தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதுதொடர்பாக கடந்த அக்டோபர் 21-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, லோதா குழுவின் பரிந்துரைகளை முழுவதுமாக அமல்படுத்து கிறோம் என மாநில கிரிக்கெட் சங்கங்கள் உறுதிமொழி கடிதம் அளிக்கும் வரை அவர்களுக்கு எந்தவித நிதி உதவியும் அளிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர், செயலாளர் அஜேய் ஷிர்கே ஆகியோர் மாநில கிரிக்கெட் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி டிசம்பர் 3-ம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் லோதா குழு, கடந்த நவம்பர் மாதம் 14-ம் தேதி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில், விதிமுறைகளுக்குப் புறம்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் பதவி வகித்து வரும் அதிகாரிகளை நீக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
மேலும் பிசிசிஐ அமைப்பின் நிர்வாகச் செயல்பாடுகளை வழிநடத்தும் பார்வையாளராக முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளையை நியமிக்க வேண்டும். பிசிசிஐ-யின் வரவு, செலவுகளை ஆய்வு செய்ய ஒரு தணிக்கையாளரையும், நிர்வாகக் குழு அலுவலர்களையும் நியமிக்க அவருக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் லோதா குழு தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுவதாக இருந்த இந்த வழக்கின் விசாரணை வரும் 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குரால் நேற்றைய விசாரணையில் கலந்துகொள்ள முடியவில்லை.
இதையடுத்து இந்த வழக்கு மீதான விசா ரணை டிசம்பர் 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT