Published : 29 Dec 2022 03:20 PM
Last Updated : 29 Dec 2022 03:20 PM
மும்பை: அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியை மகாபாரத கதாபாத்திரங்களில் ஒன்றான அர்ஜுனன் உடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் முகேஷ் அம்பானி. இதனை அவரது தந்தை திருபாய் அம்பானியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின்போது அவர் பகிர்ந்துள்ளார்.
பெட்ரோ கெமிக்கல், எண்ணெய் மற்றும் எரிவாயு, டெலிகாம் மற்றும் ரீடெயில் மாதிரியான தொழில்களை மேற்கொண்டு வருகிறார் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி. அவரது மொத்த சொத்து மதிப்பு 89 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். லீக் கிரிக்கெட் அணிகளையும் தன்வசம் கொண்டுள்ளது ரிலையன்ஸ். ஐஎஸ்எல் கால்பந்து லீக் தொடரையும் நடத்தும் அங்கமாக உள்ளது இந்நிறுவனம்.
“அர்ஜென்டினா எப்படி உலகக் கோப்பையை வென்றது? தலைமைத்துவம் மற்றும் கூட்டுமுயற்சி என இரண்டும் ஒற்றைப் புள்ளியில் இணைந்ததுதான் இதற்கு காரணம். மெஸ்ஸியின் கேப்டன்சி இல்லாமல் அர்ஜென்டினா கோப்பையை வென்றிருக்க முடியாது. அதேதான் அவருக்கும். அணி இல்லாமல் கோப்பையை வென்றிருக்க முடியாது.
அவர்கள் வெற்றி குறித்த பெருங்கனவை கொண்டிருந்தார்கள். அதை மூச்சுக்காற்றாக சுவாசித்தார்கள். அத்துடன், வெற்றிக்காக என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்தார்கள். அது இறுதிப் போட்டியில் நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட் வரை தொடர்ந்திருந்தது. முதல் போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும் அதை மற்றும் அவர்கள் விட்டுக் கொடுக்கவே இல்லை. அர்ஜுனன் எப்படி பறவையின் கண்ணை தன் அம்பினால் குறி வைத்தாரோ அது போலவே அவர்கள் செயல்பட்டனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT