Published : 28 Dec 2022 07:20 AM
Last Updated : 28 Dec 2022 07:20 AM

தரவரிசையில் 8-வது இடம் பிடித்தார் பிரனாய்

புதுடெல்லி

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய் 8-வது இடத்தை பிடித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த 30 வயதான பிரனாய், தரவரிசை பட்டியலில் 8-வதுஇடத்தை பிடிப்பது இது 2-வது முறையாகும். இதற்குமுன்னர் கடந்த 2018-ம்ஆண்டும் அவர், தரவரிசையில் 8-வது இடத்தை அலங்கரித்திருந்தார். லக்சயா சென் 7-ம் இடத்தில் உள்ளார். மகளிருக்கான தரவரிசையில் பி.வி.சிந்து ஒரு இடத்தை இழந்து 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x