Published : 26 Dec 2022 10:14 PM
Last Updated : 26 Dec 2022 10:14 PM

NZ vs PAK  | 4 ஆண்டுகளுக்கு பின்னர் அணியில் கம்பேக்: 86 ரன்கள் விளாசிய சர்ப்ராஸ் அகமது

சர்ப்ராஸ் அகமது | படம்: ட்விட்டர்

கராச்சி: டெஸ்ட் கிரிக்கெட் அணியில் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுத்த பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சர்ப்ராஸ் அகமது, 86 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார். அவர் ஆடும் லெவனில் முகமது ரிஸ்வானுக்கு மாற்றாக அணியில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

35 வயதான அவர் கடைசியாக 2019 ஜனவரி வாக்கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருந்தார். அதன் பிறகு இப்போது நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதை சரியாக பயன்படுத்தி தன் அணியின் கேப்டன் பாபர் அசாமுடன் இணைந்து 196 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை நெருக்கடியில் இருந்து மீட்டு வந்துள்ளார்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி கராச்சியில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது.

பாபர் அசாம் மற்றும் சர்ப்ராஸ் அகமது

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது பேட் செய்ய களத்திற்கு வந்தார் சர்ப்ராஸ். மிகவும் நேர்த்தியாக இன்னிங்ஸை அணுகினார். 153 பந்துகளுக்கு 86 ரன்கள் எடுத்து அவர் அவுட்டானார். அவரது இன்னிங்ஸில் 9 பவுண்டரிகள் அடங்கும். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்துள்ளது. பாபர், 161 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் சர்ப்ராஸ் அகமதின் இன்னிங்ஸை அருமையான கம்பேக் என சொல்லி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x