Published : 26 Dec 2022 09:11 PM
Last Updated : 26 Dec 2022 09:11 PM

இலங்கை, நியூஸிலாந்து தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிட்டலாம்: வாசிம் ஜாபர் நம்பிக்கை

சஞ்சு சாம்சன் | கோப்புப்படம்

புதுடெல்லி: எதிர்வரும் ஜனவரி மாற்று பிப்ரவரி வாக்கில் இலங்கை மற்றும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளன. இந்தத் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர்.

ஜனவரி 3 முதல் ஜனவரி 15 வரையில் இலங்கை அணியும். அதன் பின்னர் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 1 வரை நியூஸிலாந்து கிரிக்கெட் அணியும், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகின்றன.

“இலங்கை மற்றும் நியூஸிலாந்து என ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் நிச்சயம் சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடிப்பார் என நம்புகிறேன். அது அவருக்கு நிலையானதாக இருக்கும்” என ஜாபர் தெரிவித்துள்ளார்.

28 வயதான சஞ்சு சாம்சன், கடந்த 2015 வாக்கில் இந்திய அணியில் அறிமுகமானார். இதுநாள் வரையில் அவர் மொத்தம் 11 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 330 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 296 ரன்களும் எடுத்துள்ளார் கேரளாவை சேர்ந்த சஞ்சு. ஆனாலும் அணியில் இவருக்கான வாய்ப்பு அணியில் தொடர்ந்து கிடைப்பதில்லை. இந்த சூழலில் அவருக்கு ஆதரவாக ஜாபர் பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x