Published : 25 Dec 2022 11:44 PM
Last Updated : 25 Dec 2022 11:44 PM

அதிக கோல்கள், அசிஸ்ட்கள்: ரொனால்டோ VS மெஸ்ஸி... 2022-ல் யார் டாப்?

ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி | கோப்புப்படம்

சென்னை: கால்பந்தாட்ட உலகில் எப்போதுமே சிறந்த வீரர் யார்? என்ற ஒப்பீடு இருந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ மற்றும் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி இடையிலான ஒப்பீடுகள் எப்போதும் இருக்கும். இருவரது ரசிகர்களும் மிகவும் தீவிரமாக அதுகுறித்து விவாதிப்பது வழக்கம்.

அது சர்வதேச போட்டிகள் என்றாலும் சரி, கிளப் அளவிலான போட்டிகள் என்றாலும் சரி. இந்த ஒப்பீடுகள் ஓயவே ஓயாது. ஏனெனில் இருவரும் தரமான வீரர்கள். ஒருவரின் ஆட்டம் அதிரடி ரகம் என்றால். மற்றொருவரின் ஆட்டம் கிளாஸாக இருக்கும். இருவரும் கால்பந்து உலகின் ஆல் டைம் சிறந்த வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றவர்கள்.

பல்வேறு சாதனைகளை கால்பந்தாட்ட உலகில் படைத்தவர்கள். கிளப் மற்றும் சர்வதேச அளவில் என ஒட்டுமொத்தமாக 1,145 போட்டிகளில் விளையாடி உள்ளார் ரொனால்டோ. அதன் மூலம் 819 கோல்கள் மற்றும் 234 அசிஸ்ட்களை செய்துள்ளார். மெஸ்ஸியோ 1,003 போட்டிகளில் விளையாடி 793 கோல்கள் மற்றும் 350 அசிஸ்ட்களை மேற்கொண்டுள்ளார். இது அண்மையில் முடிந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு பிந்தையதானது.

2022-ல் யார் டாப்?

நடப்பு 2022-ம் ஆண்டில் ரொனால்டோ 51 போட்டிகளில் விளையாடி 16 கோல்களை பதிவு செய்துள்ளார். 5 முறை சக வீரர் கோல் பதிவு செய்ய அசிஸ்ட் செய்து உதவியுள்ளார். மெஸ்ஸி, 49 போட்டிகளில் விளையாடி 35 கோல்கள் பதிவு செய்துள்ளார். 33 முறை அசிஸ்ட் செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x