Published : 23 Dec 2022 08:03 PM Last Updated : 23 Dec 2022 08:03 PM
ப்ரீமியம் Rewind 2022 | காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் 4-ம் இடம்: மத்திய விளையாட்டு அமைச்சக செயல்பாடுகள் - ஒரு பார்வை
கோப்புப் படம்
புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 22 தங்கப் பதக்கம் உள்ளிட்ட 61 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் 4-ம் இடம் பிடித்து சாதனைப் படைத்தது. 2022-ம் ஆண்டில் மத்திய விளையாட்டுத் துறையின் செயல்பாடுகள்...
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 22 தங்கப்பதக்கம் உள்ளிட்ட 61 பதக்கங்களுடன், பதக்கப்பட்டியலில் 4-ம் இடம் பிடித்து சாதனைப் படைத்தது. குறிப்பாக பளுத்தூக்குதல், மல்யுத்தம் போன்ற போட்டிகளில் இந்தியர்களின் பங்களிப்பு சர்வதேச விளையாட்டு வீரர்களை பிரமிக்க வைத்தது. தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில், 14 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷியாவை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக வரலாற்றுச் சாதனைப் படைத்தது.
பிரேசிலில் நடைபெற்ற செவித்திறன் குறைபாடு ஒலிம்பிக்ஸ் போட்டியின் 8 தங்கப்பதக்கங்களுடன் 16 தங்கப்பதக்கங்களை வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்தது.
தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் 2022-ஐ கடந்த 2022 நவம்பர் 30-ந் தேதி குடியரசுத் தலைவர்திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கினார். டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமலுக்கு கேல் ரத்னா விருது உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு 44 விருதுகள் வழங்கப்பட்டன.
2022-ல் இந்தியா நடத்திய சர்வதேச விளையாட்டுப் போட்டிகள்:
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
WRITE A COMMENT
Be the first person to comment